ஒற்றாடல்! அசைவ நகைச்சுவை நேரம்!

அந்த ராணுவப் பயிற்சிப் பள்ளியில் ஒரு ஸ்பெஷல் க்ரூப்புக்கு மறைந்திருந்து வேவுபார்க்கும் கலையில் தீவிர பயிற்சி தரப்படுகிறது. ஒரு சிறு குழு, காட்டில் கண்டுபிடிக்கமுடியாதபடி பின்புலத்தோடு ஒன்றி தங்களை மறைத்துக் கொண்டு (camouflage) எதிரிப்படை ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கவேண்டும். பயிற்சி தரும் கண்காணிப்பாளர் “ நீங்கள் என்ன நடந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட இடத்திலிருந்து இம்மியளவும் நகரக் கூடாது. மிக முக்கியமானது, முழு அமைதி. உங்கள் அமைதியில் நீங்கள் பிராணிகள், செடிகொடிகள் பேசிக் கொள்வதைக்கூட கேட்க முடியவேண்டும்.” பயிற்சி தான் என்றாலும் யாரும் அவர் உத்தரவை மீறமாட்டார்கள், ஏனெனில் இந்தப் பயிற்சி நாளை அவர்களையும் அவர்கள் நாட்டையும் காப்பாற்றக்கூடும். .

இந்தக் குழுவில் ஒருவனுக்கு ஒரு மரக்கிளையோடு மரக்கிளையாக ஒன்றிப்போய், கீழே காட்டில் நடப்பதை கவனிக்கும் பணி. அரைமணி நேரம் அசையாமல் இருந்தவன் திடீரென்று கிளையிலிருந்து குதித்து ஓடினான். நீண்ட விசில். பயிற்சி தோல்வி. இது போரின் போது நிகழ்ந்திருந்தால் அந்தக் குழுவைச் சார்ந்த அனைவர் உயிருக்கும் ஆபத்து. ஏனென்றால் ஒவ்வொரு செடியும் மரமும் புதரும் எதிரிகளால் தேடப் பட்டிருக்கும். பயிற்சி கண்காணிப்பாளர் ஓடிவந்து குதித்துவந்தவனைப் பிடித்துக்கொண்டார். “ஏன், என்ன ஆயிற்று உனக்கு?”

“கேப்டன் சாப், என் மீது ஒரு பட்சிக்கூட்டமே எச்சமிட்ட போதும் அசையவில்லை. பிறகு அந்தக் கிளையிலிருந்த ஏகப்பட்ட கட்டெறும்புகள் என்மேல் ஏறிக்கொண்டு என்னைக் கண்ட இடத்திலும் கடித்தபோது நான் அசையவில்லை. ஆனால், இரண்டு அணில்கள் என் ட்ரௌசரில் புகுந்து கொண்டு, மேலே ஏறி, என் தொடை நடுவில் வந்து…”

“சொல், உன் தொடைநடுவில் வந்து?”

“நீங்கள் சொன்னபடி அவை பேசிக்கொண்டதைகூட என்னால் கேட்கமுடிந்த்து. ஒரு அணில் மற்ற அணிலிடம் சொன்னது, நீ இந்தப்பக்கம் கொட்டையைதின்னு, நான் அந்தப்பக்கம் கொட்டையைத் தின்றுவிடுகிறேன். அதுதான் நமக்கு இன்று லன்ச்”. அணிலிடம் ஒரு கொட்டை (nut) கிடைத்தால் என்னாகும்? அதால தான் நான் குதித்து ஓடிவந்துட்டேன், கேப்டன் சாப். “

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.